New Year celebration - 2020

பெரும் மாற்றங்களை சந்தித்து வரும் ஊடகத்துறையின் பல்வேறு பிரிவுகள் முன்னிருத்தி அன்றாட வகுப்புகளோடு பயிலரங்குகளும் நடத்த வேண்டும் என்று முயற்சி மேற்கொண்டிருந்தோம். YouTube, டிஜிட்டல், வானொலி, உண்மை கண்டறியும் fact checking என்று தொடர்ந்து பல பயிலரங்குகள், துறை சார்ந்த பிரபல வல்லுனர்கள் உதவியுடன் QIAMSல் கடந்த சில மாதங்களாக வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. அது தவிர "சங்க காலம்" குறித்து மாதாந்திர தொடர் சொற்பொழிவுகள், நீர் மேலாண்மை என்று பல்வேறு வரலாறு, சூழழியல் குறித்தும், சமூக அக்கறையுடன் பல்வேறு சொற்பொழிவுகளும் நடை பெற்று வருகின்றன. இவற்றிற்கு முத்தாய்ப்பாக கடந்த 15ஆம் தேதி சனிக்கிழமை, காலை முதல் மாலை வரை நடந்த செய்தி வாசிப்பாளர் பயிலரங்கம். தொலைக்காட்சி செய்தி வாசிப்பு மற்றும். நெறியாள்கை செய்திடும் பிரபலங்கள் தங்கள் அனுபவத்தோடு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 50க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு பயிற்சியளித்ததோடு, தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். பாத்திமா பாபு, ஜெனிபர், இயக்குநர் அனீஸ், ரஞ்சித், தாட்சாயிணி, விஜய கிருஷ்ணன் என்று செய்தி வாசிப்பு மற்றும் நெறியாள்கையின் பல்வேறு கோணங்களை சுவாரசியமாக, பங்கேற்பாளர்கள் இரசிக்கும் வகையில் எடுத்து வைத்தனர். காமிரா முன்னால் உடல் மொழி, உச்சரிப்பு, பத்திரிக்கையாளர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்று செய்தி வாசிப்பாளர்களுக்கு அறிவுருத்த்ப் பட்டால் ஒரு நிகழ்ச்சி நெறியாள்பவர் எப்படிப் பேசினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற அடிப்படை விஷயங்களை பயிற்றுவிக்கும் களமாகவே இருந்தது. மூச்சுப் பயிற்சி, மேக்கப், மேடைப்பேச்சில் கையாள வேண்டிய உத்திகள் என்று அனைத்தும் கலகலப்பாக பகிர்ந்து கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. "வாழைப்பழம் உச்சரிப்பு யாரெல்லாம் சரியா சொல்றீங்கனு பாப்போம்" என்ற சோதனை பங்கேற்பாளர்கள் பலருக்கும் தோல்வியே..! இது போல் பல வார்த்தைகள். இருப்பினும இந்த உச்சரிப்பு சரியாக இருந்தால் தான் வாசிப்பாளர் ஆக முடியும் என்பதால், தினமும் பயிற்சி எடுக்க பலரும் உறுதிபூண்டதை உணர முடிந்தது.

New Year celebration - 2020

One day seminar on VFX and DI was organised by QIAMS today (22.2.2020). Experts from the industry gave deep insights on interesting topics like importance of film and video editing and color grading. Film editor Mr. Chandrasekar from MGR govt film and television Institute of Tamil Nadu, spoke about perfection, timing and position of scenes and the importance of editing in placing shots, scenes and sequence in movies by citing examples from movies like Roja, udhiri pookal and many more and quoted examples of eminent directors. Mr. Meril, Chief Technologist, Bhramma Cine creations, India, explained the importance of colour grading and usage of colours in launching a product. He also highlighted the importance of colour psychology in any visual element and the importance of matching tones by citing various examples from Hollywood to Indian films. He also gave insight on the job opportunities in the field especially for girls as they have more sense of colour. He mentioned that the field has lot of opportunities which can make one earn up to 2 lakhs a month. Many students from various colleges attended the seminar today and felt very excited about the new career paths that Vfx and DI could lead them to.

New Year celebration - 2020

The first event in the eventful organization.... Welcoming 2020 with lot of hope and determination with our strength and guiding star our general Secretary Dawood Miakhan sir. We are so happy to have produced enthusiastic young journalists in the past two years who are now working in reputed media organizations and take more pride to say that we are the only institution in the state or even the country to give media education without focusing on monetary benefits and with focus on our motto to make ethical journalism possible in our country. We seek the blessings of Almighty and good will of our well wishers and step into this year with determination to produce more ethical journalists. Wishing everyone a happy and prosperous new year 2020.

Sanga Kaalam

Qiams hosted the first lecture about "Sanga Kaalam" on November 23rd 2019. Today the second part of the lecture series was held at our convention hall By professor Marxia Gandhi. We had enthusiastic participants which made the seminar more interesting. our sincere thanks to Professor Marxia Gandhi who made us travel back in time and understand our culture better. Details about the next lecture on "Sanga Kaalam" will be intimated soon in our fb page.

இசையும் இஸ்லாமும்

இசைக்கு மதம் இல்லை. குறிப்பாக தமிழ் இசைக்கு மதம் இல்லை. Does Music has a religion? Definitely not in the Tamil Music tradition. தமிழகத்தில் "இசையும் இஸ்லாமும்" என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது இசை முரசு நாகூர் ஹனீபா மட்டுமே. ஆனால் ஹனீபாவிற்கு முந்தியதோர் காலத்தில் பல்வேறு தமிழ் இஸ்லாமிய புலவர்கள், இஸ்லாமிய கீர்த்தனைகளை அழகுத் தமிழில் இயற்றியுள்ளனர் என்பது பலருக்கும் தெரியாது.

Hundreds of Tamil Islamic keerthanas have been rendered by Muslims in the past, in the south Indian raga based tradition. These were not confined to just Tamil Nadu and Sri Lanka but wherever Tamils had their footprints through more than a millenium old maritime trade, especially across the seas in places like Burma, Malaysia, Singapore and many parts of South East Asia, books with Tamil Islamic keerthanas were published in the 19th century, often specifying the south Indian ragas.

தென்னிந்திய தமிழ் இசை மரபில் ராகம், தாளம், பல்லவி என்று நூற்றுக்கணக்கான தமிழ் இஸ்லாமிய பாடல்கள், இயற்றப்பட்டு பாடப்பட்டும் வந்தன. தமிழகத்தில் மட்டுமில்லை, தமிழர்கள் வணிகத்திற்காக கால் தடம் பதித்த பர்மா, மலேசியா, சிங்கப்பூர் என்று கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும், அருகாமையில் உள்ள இலங்கை உட்பட, 19 ஆம் நூற்றாண்டில் பல தமிழ் இஸ்லாமிய கீர்த்தனைகள் பதிப்புகளாக வெளியிடப்பட்டன.

இறைவனையும் அவனது அடியார்களையும், புகழ்ந்து பாடுவதில் தமிழ் சமூகங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவையில்லை. சைவம், வைணவம், சமணம், கிறித்தவம் என்று கீர்த்தனைகள் பாடப்பெற்ற நீண்ட பாரம்பரியம் நமக்குண்டு. Be it the Tamil Jains, Saivites, Vaishnavites, or Christians, every religious community has rendered devotional hymns in the Tamil musical tradition.

மக்காவுக்கு சென்ற சித்தர் போகர், யாக்கோபு சித்தரான இராமத்தேவர் என்று சுவாரஸ்யமான தமிழ் பாரம்பரியத்தை சுட்டிக்காட்டி, குணங்குடி மஸ்தான் சாகிபு, அதிராம்பட்டினம் அண்ணாவியார் பாடல்கள் என்று தென்னிந்திய இசை மரபில் வேரூன்றிய தமிழ் இஸ்லாமிய கீர்த்தனைகள் வரலாற்றை பென்சில்வேனியா பல்கலைக் கழக பேராசிரியர் தேவேஷ் சோனேஜி, புதன் மாலை (December 18) காயிதே மில்லத் சர்வதேச ஊடக அகாடெமி QIAMSல் "Occluded Muslim Histories of Modern South India Rāga-Based Music என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Davesh narrated stories of Bogar, the Tamil mystic travelling to the holy Mecca and Ramathevar who became Yakob Siddhar. Songs of Kunangudi masthan who straddled the world of the Tamil mystical siddhar tradition as well as the sufi tradition and the Adirapattinam based Annaviyar family were quoted as examples of a long list of the Tamil Islamic keerthnas

முத்தாய்ப்பாக நிகழ்வுக்கு சிறப்பு வருகை தந்திருந்த சீறாப்புராணம் புகழ் குமரி அபூபக்கர் அவர்கள் சில கீர்த்தனைகளை, குறிப்பாக அதிராம்பட்டினம் அண்ணாவியார் இயற்றிய "நாகூர் புகை இரத சிங்கார ஒயிற் சிந்து", பாடல்களை பாடி நிகழ்ச்சியை இனிமையாக நிறைவு செய்தார்.

டிசம்பர் 14 ஆம் தேதி அன்று தனது 50 ஆண்டுகளுக்கும் மேலான வானொலி நினைவுகளை, கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்கள் QIAMSல்,பெருந்திரளான இரசிகர்களுடன் சுவராசியமாக பகிர்ந்து கொண்ட அன்பு அறிவிப்பாளர் B.h. Abdul Hameed அவர்கள், இந்நிகழ்விற்காக தனது பயணத்தை தள்ளிப் போட்டது சரியான முடிவு என்று மகிழ்ந்து நம்மிடம் சொன்ன போது மனநிறைவாக இருந்தது.

பேராசிரியர் Davesh Sonejiயின் தமிழ் இஸ்லாமிய கீர்த்தனைகள் குறித்த ஆய்வு, தமிழக இசை மரபில் முக்கிய மைல்கல். Davesh Soneji's work on the Tamil Islamic Keerthanas is a very important piece of work in understanding the Tamil cosmopolis, where Tamil musical traditions cut across religions.

MONETISING DFIGITAL PLATFORM

சென்னை மெரினாவில் சுடச் சுட பொரித்த மீன் விற்கும் சுந்தரி அக்காவுக்கு சிறந்த சுகாதாரக் கடைக்கான விருது, அரசியல் செய்திகளை புறந்தள்ளிவிட்டு அதிகப் பார்வையாளர்களை கவர்ந்தது என்பது பலருக்கும் ஆச்சரியமாகப் படலாம். ஆனால் அதுதான் உண்மை என்பதை பார்வையாளர் புள்ளி விவரங்கள், நவீன தொழில்நுட்பத்துடன் நமக்கு சுட்டிக் காட்டும் போது மறுப்பதற்கில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழக மக்கள் சினிமா குறித்த செய்திகளை விட வாழ்க்கைத்தரம் (Life Style) குறித்த செய்திகளை அதிகமாக விரும்புவதாகவும் அதே போல் குறிப்பிட்ட செய்தி அதிகமான பார்வையாளர்களை சென்றடைய, காணொளியை பகிர்வதற்கான சரியான நேரத்தை தேர்ந்தெடுப்பதற்கும் google analytics போன்ற கருவிகள் உதவுகின்றன என்றார் Hema Rakesh, digital editor, News J.

பிரபல Red Pix YouTube சேனலின் நிறுவனர் தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தனது அனுபவங்களை பகிரும் போது டிஜிட்டல் ஊடக சாதனங்கள் குறித்து பல மாயைகளை உடைத்தெரிந்தார். இவை இலவசம், நடத்துவதற்கு லைசென்ஸ் தேவையில்லை என்பதெல்லாம் மாயையென்றும், YouTube Partner Program இல் இணைபவர்கள் 51% - 49% என்ற வருமானைப் பகிர்வு அடிப்படையில்தான் இயங்க முடியும் என்பதை சுட்டிக் காட்டினார். வீடியோவின் நேரம் அதிகமாக இருந்து பார்வையாளர்களையும் கவர்கிறது எனும் பட்சத்தில் அதிக வருமானம் வர வாய்ப்புண்டு என்பதனையும் விளக்கினார். தவிரவும் சிரத்தையெடுத்து நல்ல தொழில் நுட்பத்துடன் பதிவிடப்படும் தரம் வாய்ந்த வீடியோக்களையம் கூகிள் தரம் பிரிக்கின்றது என்பதனையும் விளக்கினார். அதே போல் Intelligent Algorithm கொண்டு கூகுள் பதிவிடப்படும் வீடியோவின் உண்மைத்தன்மையை ஓரளவு கணிக்க வகையில் முன்னேறி வருகின்றன என்றும் கூறினார்.

இறுதியாக Mylapore Times ஆசிரியர் வின்சன்ட் டி சோசா பேசுகையில், நமக்கு அருகில் நடக்கும் அரசியல் அல்லாத அன்றாட வாழ்க்கை செய்திகளுக்கு உலகம் முழுவதும் பார்வையாளர்கள் உண்டு என்றும். பல லட்சங்களில் இல்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட அர்ப்பணிப்புடன் (dedicated) கூடிய தொடர்ந்து மயிலாப்பூர் குறித்து பதிவிடப்படும் வீடியோக்களை காண்பதற்கு உலகின் பல்வேறு மூலைகளில் பார்வையாளர்கள் உண்டு என்று ஆணித்தரமாகப் பேசினார். இந்த அசுரத்தனமாக தொழில் நுட்பம் மாறிவரும் டிஜிட்டல் உலகத்திலும் கரு (content ) முக்கியம் என்பதும், அது உருவாக்கபப்டும் விதம், டிஜிட்டல் தொழில் நுட்ப உதவியுடன் பார்வியாளர்களின் விருப்ப வெறுப்புக்களை புரிந்து கொண்டு அதே சமயம் நெறிமுறைகளோடு செயல்படுவது இன்றியமையாதது என்பது மூவரின் உரையிலிருந்து தெளிவானது. காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி கருத்தரங்கில் அகடெமியில் 30 நவம்பர் சனிக்கிழையன்று டிஜிட்டல் ஊடகத்தில் YouTube, முகநூல் குறித்த கருத்தரங்கில் பார்வையாளர்களுடன் கேள்வி பதில் என்று இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.

Digital Marketing Workshop:

In today’s New age media world, anything can get viral with just a Hash tag (#). But did you know more than 3 Hash tags on an FB post and more than 5 Hash tags on an Instagram post can get you negative ratings?
Digital Marketing is a wide ocean of information, and in the digital workshop conducted by Mr. Elangovan on the 23rd of Nov at QIAMS , we were exposed to many such unknown and hidden aspects of Digital Marketing that every Start up and MSME’s should be aware of, to embark into a fruitful journey towards a successful business.

Research, Segmentation, Branding, Targeting, Market mix etc …were discussed followed by a clear thought process to - CCI – Copy , Customize and Innovate, a fool proof mantra to find your way in the digital jungle. The web world today is so vast that all information required to understand what a successful business is doing, to be where they are , is available just a click away. The right tools and focus is all one requires to tap the already available information and use it to suit the requirement of ones own business. Understanding your target audience , being thumb friendly , consistent in visual content and usage of 50 to 100 organic keywords are few steps towards making your digital mark on the web.

The session was a commendable success and we at QIAMS are looking forward to have more such sessions in the future.

முதல் சொற்பொழிவு: சங்க கால சமூக அடிப்படைக் கட்டமைப்பு

சனிக் கிழமை காலையில் நல்ல கனமழை. இருப்பினும் முனைவர் மார்க்சிய காந்தியின் "சங்க காலத்தில்..." உரையை கேட்பதற்கு, காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகடெமியில் (QIAMS) குவிந்த ஆர்வலர்கள் கூட்டத்திற்கு குறைவில்லை. அதுவும் கணிசமான இளைஞர்கள் கூட்டம் மிகுந்த மகிழ்ச்சியையும், அடுத்த தலைமுறை குறித்து நம்பிக்கையயும் ஏற்படுத்துவதாக இருந்தது. வந்திருந்தவர்களின் எதிர்பார்பிற்கேற்ப, ஒரு பாரபட்சமற்ற ஆய்வாளராக மார்க்சிய காந்தியின் உரையும் நிறைய புது சுவாரசியமான தகவல்களோடு நம் கண்முன்னே சங்க கால தமிழ் சமூகத்தை முன்னிறுத்தியது. ஒரு நூற்றாண்டு முன்னர் கூட, அறிஞர்களிடையே சங்க காலம் என்பது வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றுதான் கருதப்பட்டது என்பது வியப்பாக இருந்தது. இந்த தவறான புரிதலை கைலாசபதியின் ஆய்வுகள் தான் மாற்றியமைத்தது என்றார்.

அதேபோல் சங்க காலத்தில் கடல் சார்ந்து வாழும் பரதவர்கள் பெரும் செல்வந்தர்களாக இருந்தனர் என்பதும் புது செய்தி. தமிழ் சமூகத்தின் பொருளாதார உயர்வில் வரலாற்று ரீதியாக கடல் சார்ந்து வாழ்ந்த சமூகங்களின் பங்கினை கருத்தில் கொள்கையில் இது இயற்கையானதாகவே பட்டது.

அகமண முறை, புறமண முறை, தவறாக.அர்த்தம் கொள்ளப்பட்ட 'பரத்தமை' என்று பல விளக்கங்களுடன் முதல் சொற்பொழிவு சிறப்பாக நிறைவுற்றது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர உரை. கூட்டம் முடிந்த பின்னும் மார்க்க்சிய காந்தியிடம் ஏகப்பட்ட கேள்விகளோடு ஆர்வலர்கள் சூழ்ந்திருந்தது மகிழ்வாக இருந்த்து. இனி அடுத்த சொற்பொழிவு டிசம்பர் 21அன்று.

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நவீன தொழில் நுட்பம் மனித குலத்தை மேம்படுத்துமா அல்லது அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லுமா? அண்மைக் காலமாக பெரும்பாலானோரின் மனதில் எழும் கேள்வி இது. குறிப்பாக இணையம் உருவான பின்னர் அதுவும் சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின், பரிமாறபப்டும் பல்வேறு விஷயங்களின் நம்பகத்தண்மை சிக்கலாகி உள்ளது. பிளாஸ்டிக் அரிசி என்று வாட்சப்பில் வீடியோ, மருத்துவ ஆலோசனை என்ற பெயரில் பல்வேறு தவறான செய்திகள்.

English Nabobs of Madras

The Nawab won the wars but kept losing territories. Sounds ironical? Considering the COMPANY he kept, it wasn't surprising. The East India Company that fought the wars on behalf of the Nawab, kept sending huge bills after every battle. As payment the Nawab kept pawning his own territories, only to lose them forever. To finance the wars he kept borrowing at exorbitant rates, ultimately his Company benefactors turned his descendants into Titualr Nawabs, abolishing even that by mid 1850's.

Rivers Remember

A thought provoking talk by Kurpa GE, author of 'Rivers Remember' on how mankind has failed to preserve water bodies of Chennai and the havoc caused as a result of our flaws. The event was organised by QIAMS as part of Madras Day celebration on August 24, 2019.

Social media workshop

one day workshop on enhancing social-media skills was conducted on January 19th 2019. There were versatile audience of different age groups who got enriched with knowledge about proper usage of social media.

Commemoration of the 150th anniversary of Mahatma Gandhi

Honouring the participants of photography and essay competition held in commemoration of the 150th anniversary of Mahatma Gandhi. There were more than 750 entries from institutions all over Tamil Nadu

Skill Development workshop

Skill development workshop in Adobe Illustrator. Students of various age groups and staff members from other colleges learnt how to design a logo

Running a neighbourhood newspaper and delivering it free of cost for 25 years

Mr. Vincent D Souza who is running a neighbourhood newspaper and delivering it free of cost for 25 years shared his success story with people from the North East (as part of HMI people to people initiative)

Indian economy for media professionals and Interim central budget - 2019

As part of 'Meet the Expert' program, Dr. Sadakkadulla - Former Regional Director, Reserve Bank of India gave an insight into 'Indian economy for media professionals and Interim central budget - 2019 on 9.2.19.

Womens’ day celebration

Dr Suresh Kumar and Ms. Jayanthi Anand gave inspiring talks on women's day about 'What makes a gentleman'

Talk on World cinema

Lecture on 2nd march, 2019 by Renowned speaker, journalist, writer and media person Mr. Subbiah Rajasekar popularly known as SURA gave an insight on world cinema- a new perspective.

Mr. Ajayan Bala – Talk on Cinema

A thought provoking session on Tamil cinema by Director / Writer Ajayan Bala on nativity, language and Cinema.

India Science Wire

Dr.T.V.Venkateshwaran, Scientist and Chief Editor of “India Science Wire” highlighted on various scientific inventions and motivated young minds at QIAMS on the importance of writing good science articles

Orientation on Media for Bilalia Students

An orientation programme on media was given for Bilalia Arabic College students for a period of 12 days in the month of April. The students found media as an effective tool for progress in the society along with their spiritual education