தமிழக தேர்தல் களம் எதிர்பார்ப்புகள்


1 - அரசியலில் அதிகாரத்தில் பெண்கள் - கலந்துரையாடல்


பங்கு பெறுவோர்: திருமதி கோகுல இந்திரா , கவிஞர் சல்மா, திருமதி லட்சுமி ராமச்சந்திரன், திருமதி ஷாலின் மரியா லாரன்ஸ் , நெறியாள்கை: ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்



வெகு விரைவில் தமிழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இது மிக முக்கியமான தேர்தலாகும். இந்த தேர்தலை பொறுத்தவரை தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

இன்று இந்தியாவிலேயே பல்வேறு துறைகளில் முன்மாதிரி மாநிலமாக திகழும் தமிழகம் இனி செய்ய வேண்டியது என்ன? வரப்போகும் ஆட்சியாளர்களிடமிருந்து எதிர்பார்பது என்ன? ஆகியவற்றை அலசி ஆராய, காயிதேமில்லத் பன்னாட்டு ஊடகக் கல்வி அகாடெமியின் (QIAMS) சார்பாக மிக முக்கியமான தலைப்புகளில் கலந்துரையாடல்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

முதல் கலந்துரையாடலாக "அரசியலில், அதிகாரத்தில் பெண்கள்" என்ற தலைப்பில் திருமதி கோகுல இந்திரா, கவிஞர் சல்மா Rajathi Salma, திருமதி லட்சுமி ராமச்சந்திரன் Lakshmi Ramachandran, Shalin Maria Lawrence ஆகியோர் உரையாடவுள்ளனர். பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன் நிகழ்சியை நெறியாள்கை செய்யவுள்ளார். அனைவரும் வருக.

வரும் ஞாயிறன்று 31 ஜனவரி காலை 11 மணிக்கு QIAMS நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் நிகழ்சி YouTube மற்றும் முகநூலில் நேரலை செய்யப்படும்.