Event


நாள்: 24- 8-2019, சனிக்கிழமை
காயிதேமில்லத் சர்வதேச ஊடகக் ல்விி அகாடெமியில் (QIAMS)
செல்வி.கி.ஏ.கிருபா - "நதி மூலம் - சென்னையின் நீர் நிலைகள்" குறித்து சிறப்புரையாற்றுவார்.

நேரம்: காலை 11 மணி (தேநீர்: 10.30 மணி)
இடம்: QIAMS, # 82, ஸ்டெர்லிங் சாலை (நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் அருகில், இலயோலா கல்லூரி எதிரில்), நுங்கம்பாக்கம்
தொலைபேசி: 044 4858 1896

சென்னையின் நதிகளை நாம் மறந்துவிட்டோமா? கைவிட்டிருக்கிறோமா? புறக்கணிக்கிறோமா?
அவைகள் நம்மை மறந்து, கைவிட்டு, புறக்கணித்தால், நம் நிலைமை என்ன? காவெரிக்கென நம் ஊரில், மனதில், நம் அரசியலில், கதைகளில், கவிதைகளில், இலக்கியத்தில், அன்றாட வாழ்க்கையில் இருக்கும் இடம் சென்னையின் மூன்று முக்கிய நதிகளுக்கென்று எப்போதும் இருந்ததில்லையா? வரலாற்றின் பக்கங்களை புரட்டிப்பார்தால், நம் நதிகளின் கதையும், ஊரின், மக்களின், அரசியலின், ஏன் இந்தியாவின் வராலாற்றுப்பாதையின் கதைகளும் ஒன்றே என்பது புரிகிறது. ஒரு சில நூறாண்டுகள் பின்னோக்கி பயணிக்கலாம், வாங்க.