ஊடக உலகில் வேலை வாய்ப்புகள். செய்திவானில் சிறகடித்துப் பறந்திட

கொரோனா நமது அன்றாட வாழ்க்கையை பாதிப்பதற்கு முன்னர், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்த துறைகளில் மீடியா குறிப்பிடத்தக்கது. உலகப் பொருளாதாரத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட கொரோனா பெருந்தொற்று மீடியாவையும் விட்டு வைக்கவில்லை. வேலை இழப்புகள் ஒரு பக்கம் இருப்பினும், இந்த கொரோனா காலத்திலும் பல புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகியிருக்கின்றன, குறிப்பாக ஊடகத்துறையில். டிஜிட்டல் மயத்தை நோக்கி விரைவாக நகர வேண்டிய கட்டாயத்தில் மீடியா இருப்பதால், அத்திறன் கொண்ட பலருக்கு ஊடக உலகின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஊடக உலகில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள செல்வி. உ. மும்தாஜ் (செய்தி வாசிப்பாளர் & நெறியாளர்), செல்வி. L. P. நிர்மலா (பத்திரிக்கையாளர் & வழக்கறிஞர்) மற்றும் Dr நசீமா (HOD இதழியல்) உங்களோடு உரையாட உள்ளனர். ஊடக உலகில், செய்திவானில் சிறகடித்துப் பறந்திட வாருங்கள். வாய்ப்புகள் குறித்து தெரிந்து பலன் பெறுங்கள்.